Thursday, December 25, 2014

சாகாக்கல்வி - 5



ஆக, நமக்கு இரண்டு நம்பிக்கை இருந்தால் தான் சாகாகல்வி என்ற பள்ளிக்கு செல்ல முடியும்.

  • வினைப்படியே அனைத்தும் நடக்கின்றது என்பதில் நம்பிக்கை
  • வினையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை

இது வந்துவிட்டால் இனி சற்றேறக் குறைய தெளிவின் தெடக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்று அர்த்தம். இங்கே நாம் காணப்போவது, மூன்றில் ஒன்றை. அவை….

  • சிற்றறிவு  (ஜீவான்மா)
  • அறிவு     (ஆன்மா)
  • பேறறிவு  (பரமான்மா).
இங்கே நாம் ஒன்றாய் இருக்கின்ற ஜீவான்மாவையும், ஆன்மாவையும் பிரித்துப் பார்தால் தான் நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். திருவள்ளுவர் இதை அழகாக தன் அனுபவத்தில் குறிப்பிடுகின்றார்.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

சரி, முதலில் உடல் என்றால் என்ன? இதற்கு நாம் ஒளவை பாட்டியிடம் கேட்டால் போகின்றது…..

  • தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக ளேழு. 
  •  
  • நரம்பு, இரத்தம், சதை, மூளை, சளி, எலும்பு, சுக்கிலம். இவை ஏழும் கூடியதே உடம்பு.
இந்த ஏழும் சேர்த்தால் உடம்பின் உருவம் உண்டாகிவிடும். ஆனால் அது இயங்கமுடியுமா?. முடியாதல்லவா!

இங்கே தான் நமக்கு முதல் தெளிவு உணர்த்தப்படுகின்றது. உடல் என்பது சடம் என்று. உடலால் தன்னிச்சையாக இயங்கமுடியாது என்பதும். சடமாகிய இந்த உடலில் உயிர் வந்தால் உடலின் மொழி தான் என்ன? உணர்வு தான். இந்த உணர்வு தான் ஜீவான்மா. (விசேஷ ஜீவன்) இது இறந்துவிடும்.

இங்கே ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். ஜீவன்மாவிற்கு தான் செய்வது என்ன என்று தெரியாது. எப்படி என்கின்றீர்களா!

  • பார்க்கின்ற கண்ணுக்கு தான் பார்ப்பது என்ன என்று தெரியுமா?
  • கேட்கின்ற காதுகளுக்கு தான் கேட்பது என்ன என்று புரியுமா?
  • பேசுகின்ற வாய்க்கு தான் பேசுவது என்ன என்று புரியுமா? ….
ஆனால் செய்யச்சொன்னால் செய்வார்.  இதை பாதுகாப்பதுதான் நமது தொகுப்பின் லட்சியம். 
அடுத்தாக, ஆன்மா இதோ வல்லவனின் அனுபவக்குறிப்பு …

  • நான் ஆன்மா. (சாமானிய ஜீவன்) சிற்றணு வடிவன். (Power……………ful microscope மூலம் கூட காணமுடியாதது) கோடி சூரியப் பிரகாசமுடையவன். புருவ மத்தி இருப்பிடம். கால் பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இறப்பில்லாதவன். என்னை ஏழு திரைகள் மறைத்திருக்கின்றன.
இப்படிப்பட்ட ஆன்மாவும் தன்னிச்சையாக தன்னால் இயங்கமுடியாது. அப்படியென்றால் இவன் இயங்குவது எப்படி. இங்கே தான் இறைவனின் திருவிளையாடல் தொடங்குகின்றது. இப்படி இரண்டு contrasting end களை ஒன்றாக இணைத்து விளையாட்டை தொடங்குகின்றான்.

  • உடலின்றி உயிர் இல்லை, உயிரின்றி உடல் இல்லை.
மீண்டும் திருமூலரின் விளக்கம்….

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725).

இப்பொழுது நமக்கு ஜீவான்மா, ஆன்மா என்றால் என்ன என்று ஒரு outline-ஐ தெரிந்துக்கொண்டோம். ஆன்மாவே உடலை இயக்குகின்றது என்ற தெளிவையும், நல்வினையும், தீவினையும் அந்த ஆன்மாவிடத்தே சேரும் என்பதையும், அதனால் ஆன்மாவிற்கு பிறவிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதும். உருவத்தினால் உயிர்கள் பிரிக்கப் பட்டிருக்கின்றன என்பதும், உருவற்றால் வேற்றுமை இல்லை என்பதும், புரிந்திருக்கும்.

கோடி சூரிய பிரகாசமுடைய ஆன்மாவை இன்னும் சற்றே அருகில் சென்று பார்த்தால் நமக்கு இன்னும் தெளிவு பிறக்கும். இங்கே வல்லவனின் அனுபவக் குறிப்புகளை சற்றே பார்ப்போம். வாருங்கள் போவோம்.

ஜீவ வாழ்க்கைக்கு கடவுளால் கட்டிக்கொடுக்கபட்ட தேகம் – ஒரு சிறிய வீடாகும். இந்த தேகத்திலிருக்கின்ற கரணம், இந்திரியம், முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவ சடங்களே.
என்னமோ, பார்க்கலாம் என்று சொல்லி கூட்டிட்டு போன, இங்க வந்தா, கருவிகளாய தத்துவ சடங்களே. அப்படின்னு சொல்ற. 

அப்படின்னா என்னது. இதோ…

  • ஆன்ம தத்துவங்கள் வருமாறு:                                      -36
  • பஞ்சபூதங்கள்  -    நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு          - 5
  • சூட்சும பூதங்கள்-உருவம், சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி      - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
  • ஐம்பொறிகள்   -     கண், நாக்கு, செவி, மூக்கு, மெய்            - 5
  • செயலுறுப்புகள்      -     கை, கால்,வாய், குதம், குறி            - 5
  • உட்கரணங்கள்       -     மனம், அறிவு, சித்தம், அகங்காரம்     - 4
  • வித்தியாதத்துவங்கள் வருமாறு:
  • காலம்,
  • நியதி,
  • காலை,
  • விதை,
  • அராகம்,
  • புருடன்,
  • மூலப்பிரகிருதி                                                       - 7
  • சிவதத்துவங்கள் வருமாறு:                                         - 5
    • சுத்த வித்தை   -     அறிவு குறைவாக இருந்து செயல் அதிகமாக இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.
    • ஈசுவரம்         -     அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருகின்றது
    • சாதாக்கியம்    -     சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
    • விந்து           -     இது சக்தியின் வடிவம்.
    • நாதம்      -    இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.


இப்ப புரியுதா ஆன்மானா என்னன்னு, உடனே பயந்துடதீங்க, தத்துவம் என்றால் அறிவு என்றே பொருள். இந்த (24 + 7 + 5 = 36) அறிவுகளும் சேர்ந்ததே ஆன்மா என்ற ஒரு அறிவு. இந்த அறிவுகள் ஒவ்வொன்றையும் கடந்து போனால் நம் தேடலின் (இந்த தொகுப்பு ஆன்மா என்ற அறிவை என்ற தன்னை என்ற நான் ஐ தேட விரும்பும் ஆன்மாக்களுக்கு சமர்ப்பனம்.) முடிவுக்கு வந்துவிடுவோம்.


இங்கே நமக்கு சில கேள்விகள் எழும்,


1.ஆன்மாவுக்கு 36 அறிவு என்றால் இறவனுக்கு 60 அறிவுகள். இந்த 36 + 60 = 96 அறிவுகளும் சேர்ந்ததே பேரான்மா. என்ற ஒரு அறிவு.    


2. இந்த ஆன்மாவை தேடுவதால் நமக்கு என்ன நன்மை. இ்தோ நம்ம வல்லவனிடம் கேட்டால் போயிற்று. நமக்கு சொல்லாமலா போய்விடுவார்.


சாகாத்தலை யென்பது:               -           ருத்திர தத்துவம்

வேகாக்கா லென்பது:                   -           மகேசுவர தத்துவம்

போகாப்புனல் லென்பது:           -           சதாசிவ தத்துவம்.


ஆத்ம தத்துவாதி ஜீவகரணம் 36, நிர்மல குரு துரியாதீதம் 7, ஆக நிலைகள் (36 + 7 = 43) 43. இந்த 43 நிலைகளிலும் மேற்குறித்தவை உள. சாகக்கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல் நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரம்மன். அவன் காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்: மேற்குறித்த மூன்றும், பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும்.


இப்ப புரியுதா, சாகக்கல்வியின் முதல் நிலையே நமக்கு பிரம்மாவின் வயது கொடுக்கப்படும் என்று, என்னாப்பா நீ நாக்குல தேன் தடவுற! மெய்யாலுமா?. இ்தோ, நம்ம வல்லவனிடம் கேட்டால் போயிற்று.


நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனா லுடம்பு                             
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே   
ஞான நடத்தரசே யென்னுரிமை நாயகனே யென்று                          வனைந்துவனைந் தேத்துதுநாம் வம்மீன்னுல கியலீர்                                        மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர்               புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்          பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே.

பாட்டாவே படிச்சிட்டார் பாருங்கள்.


சரிப்பா, 36 தத்துவத்தை சொன்ன, அது என்ன ருத்திர, மகேசுவர, சதாசிவ தத்துவங்கள். இதெல்லாம் வேற ஒன்னும் இல்லைங்க எல்லாம் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். இதோ

பிரம்மா             - உந்தி                     - மனம்                     -           6

விஷ்ணு           - கொப்பூழ்             - புத்தி                       -           6

சிவன்                - மார்பு                     - சித்தம்                   -            6

மகேசுவரன்   - கண்டம்                - ஜீவான்மா           -           6

சதாசிவம்        - உன்னாக்கு         -                                   -           6

விந்து                - புருவமத்தி         - ஆன்மா                -             6


இந்த உடலின் பகுதிகள் கொடுக்கப்பட்டதற்கு காரணம் இந்த பகுதிகளில் எல்லாம் சக்தி இருக்கின்றது. இதில் நாம் அடையவேண்டிய ஸ்தானங்கள் மகேசுவர ஸ்தானம் முதல் விந்து ஸ்தானம் வரை.



கல்வி தொடரும்.......

No comments:

Post a Comment