Thursday, December 25, 2014

சாகாக்கல்வி- 1



சன்மார்க்கம் என்பதை நான், நீ என்கின்றார்.
இதோ அவர் அனுபவ வார்த்தைகள்


தங்களைப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்; என்னைப் பார்க்கவேண்டுமானால் தங்களைப் பாருங்கள். தங்களைப் பார்த்தால், என்னைப் பார்ப்பீர்கள்: என்னைப் பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள்.”
 
இவ்வாறு நமக்கு நான் நீ என்று சொல்லி நம் தேடலின் தொடக்கத்துக்கு நம்மை அழைத்து செல்கின்றார்.


மீண்டும் அதை நினைவு கூர்வோம் நான் என்ற தன்னை என்ற ஆன்மா என்ற அறிவை தேடுவது என்று நம்மை சன்மார்க்கத்தின் அருகே அழைத்து செல்கின்றார். இப்படி மெதுவாக அருகே அழைத்து சன்மார்க்கதின் முதல் படியாகிய நான் நமக்கு காண்பித்து அதை நம் அனுபவத்தின் கண் பெற வேண்டும் என்று சொல்கின்றார். இதோ அவர் அனுபவ வார்த்தைகள்


நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது  இவற்றிற்


பரம்              -           பரலோக விசாரம்,
 
அபரம்         -           இகலோக விசாரம்.


அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும்,
 
பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.


இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது. இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள்.”


ஆஹா, இப்படி மெதுவாக அருகே அழைத்து நமக்கு நான் சொல்லிவிட்டார் இனிமேல் நமக்கு எல்லாம் ஜெயம் என்று நமது கற்பனை குதிரையை தட்டிவிட்டோமானால் சுத்த ஞானி சிவவாக்கியர் அங்கே தோன்றுவார்


ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே


பாருங்கள் இந்த சுத்த ஞானியின் அனுபவத்தில் எத்தனை பெரிய உண்மையை வெட்டவெளிச்சமாக கண்டு நமக்கு உணர்த்துகின்றார். இங்கே தான் அனைத்து ஆன்மாக்களும் தங்கள் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மயங்கி தயங்கி ஞானியின் அனுபவத்தை உறுதி செய்கின்றன.

இதன் காரணம் (சுட்சுமம்) தான் என்ன என்று அறிய தொடங்கினால் மட்டுமே நமது அறிவின் முதல் புள்ளி தொடங்கபடும் என்று நமக்கு உணர்த்துகின்றார்.


உலகத்தில் படைக்கபட்ட, படைக்கபடுகின்ற, படைக்கபடபோகின்ற அனைத்து உயிர்களுக்கும் அறிவு எவ்வாறு கொடுக்கபட்டிகின்றது என்று அவ்வை பாட்டியின் அனுபவத்தை சற்று உணர்ந்து பார்த்தால் நமக்கு உண்மை புரியும்


உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோல் னிற்கும் நிறைந்து.


நிலவின் ஒளி போல் தெரிந்தும் தெரியாமல் தெளிவு இல்லாமல் மங்களாக இருக்கும் நமது அறிவயே (சிற்றறிவு) நாம் அனத்தும் அறிந்ததாய் நினைத்து கொண்டு இங்கே உழன்று கொண்டிருக்கிறோம். இதை வல்லவன் தனது அனுபவ வார்த்தைகளில் விளக்குகின்றார்.


கட்டோடே கனத்தோட வாழ்கின்றோ மென்பீர்
            கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
            பசியோடே வந்தாரைப் பார்க்கவு நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
     குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே யிரண்டுசேர்த் தெண்ணவு மறியீர்
     எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.


நம் வாழ்க்கை முறையை எவ்வளவு அருமையாக தெளிவாக தனது பேரறிவாள் உணர்ந்து அப்போதே உணர்த்துகின்றார். இங்கே பசி என்பதை நாம் வயிற்று பசி என்று மட்டும் நினைத்துக்கொண்டு உணவை தூக்கி கொண்டு தெரு தெருவாய் அலைகிறோம். உயிர்களின் தேவை எல்லாம் அந்த உயிருக்கு பசி தான் என்று அவர் நினைக்க சொல்கிறார் என்பதை நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்து உணரவேண்டும்.


இவ்வாறு நம்மை உணரச்செய்து சன்மார்க்கத்துக்கு இன்னும் சற்றே அருகே அழைத்து செல்கிறார்.


பரவாயில்லையே இவ்வளவு சொல்லி நம்மள கூட்டிட்டு போறாரே ரொம்ப நல்லவர் போல என்று பொட்டிய தூக்கிக்கிட்டு கிளம்பினீங்கனா உடனே வருவது உங்கள் மனைவி () தாய் () அக்கா () தங்கை
என்னடா இது சுத்த ஞானியா வந்துகிட்டு இருந்தாங்க இப்ப தாய்குலமா வருகின்றார்களே என்று நினைக்க தோன்றுகின்றதா.


இங்கே தான் உயிர்கள் உழல்வதற்கான முதல் சுட்சுமத்தை (காரணத்தை) இயற்கையிலேயே இறைவனாகிய (பேரறிவாளன்) வகுத்துள்ளான்.

கல்வி தொடரும்......

No comments:

Post a Comment