இதுவரை நாம் படித்ததை ஒரு முன்னுரையாகக்கொண்டு இனி வரும் பக்கங்களில் எவ்வாறு அதை செயல்படுத்துவது என்று பார்ப்போம். அதற்கு
கடைசியாக ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். உலகியல் என்றால் என்ன? உலகம் எவ்வாறு தோன்றியது? உயிர்கள் எவ்வாறு காரியத்தை செய்விக்கபடுகின்றன?
என்பதை புரிந்து கொண்டால் அனைத்தும் வெட்டவெளிச்சமாக புலப்படும்.
விஞ்ஞானம் உலக தோற்றத்தை பற்றி என்ன சொல்கிறது. பரினாம
வளர்ச்சியின் வேறுபாடே உலகம். இதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். வேறு கருத்து வேண்டாம். ஏனென்றால்,
நாம் அறியப்போவது சாகாகல்வியை. இதற்கான உண்மை, நம் அறிவு விளங்கும் போது நமக்கு விளங்கும். சரி,
அடுத்ததாக உயிர்கள் எவ்வாறு காரியத்தை செய்விக்கபடுகின்றன?.
உயிர் படைப்பின் ரகசியம் என்ன?. இனி, வருவது எல்லாம் நம் மூதாதையர்களின் அனுபவம் மட்டுமே. இதோ அவர்கள் அனுபவ வார்த்தைகள்…..
திருமூலர்
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் (1)தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா
ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
(தலைக்காவல் மேல்வைத்து.)
இதன் மூலம் அறிவது உயிர்கள் (ஆன்மாக்கள்) தங்கள் வினை (செயல்கள்) மூலம் உலகில் பிறவி (உடல்) எடுக்கின்றன.
திருஞானசம்பந்தர்.
பொல்லா வினையேன் புகழுமாறு
ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்
கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து
இளைத்தேன்……
சிதம்பரம் இராமலிங்கம்.
கடவுளால் கட்டிக்கொடுக்கபட்ட
தேகம் – ஒரு சிறிய வீடாகும். ஒரு வீட்டில் குடிக்கூலி
(rent) கொடுத்துக் குடித்தனஞ்
செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது, வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டானென்றும்,
இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடி
போவான் என்றும் அறிவதுபோல், இந்த தேகத்தில் ஆகாரக் கூலி
கொடுத்துக் குடியிருக்க வந்த ஜீவன் ( ஆன்மா) இதற்கு முன்னும் வேறொரு
தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்து ஜீவித்திருந்தானல்லது, தேகமில்லாமல் ஜீவித்திருக்கமாட்டானென்றும், இந்த தேகத்திலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு தேகத்தில் குடிபோவானென்றும்,
துணியவேண்டும். ஆதலால்
முன்னும், பின்னும் ஜீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்று அறிய வேண்டும்.
ஒரு சமசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல்
துன்மார்க்கர்களை வருவித்து
அவர்களோடு கூடிப் பழகி யிருந்தானானால், அந்த சம்சாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டில் வந்து, அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு ஜீவன் (ஆன்மா) முன் குடியிருந்த தேகத்தில், கடவுள் கட்டளைப்படி நடவாமல்
துன்மார்க்கத்தால் பாப
கருமங்களை விரும்பி செய்திருந்தானால், அந்த ஜீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும், அந்தப் பாப கர்மங்கள் இப்போதுவந்த
தேகத்திலும் வந்து அந்த ஜீவனைச் செருமென்று அறிய வேண்டும்.
விஞ்ஞானத்தில் Newton’s third law என்ன சொல்கிறது…
- “Every action has an opposite and equal reaction.”
இதிலிருந்து நமக்கு புலப்படுவது என்னவென்றால் முற்பிறப்பில் செய்த வினைகளுக்கு ஏற்பவே இங்கே நமக்கு உடல், பொருள், சூழ்நிலைகள் என
அனத்தும் கொடுக்கப்பட்டிருக்கின்றன
என்பதுதான்.
வினைப்படியே தானே நடக்குது அப்படியே நடக்கட்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள்
அறிவின் அடுத்தப்புள்ளி தொடங்குகின்றது என்று அர்த்தம். தொடங்கிய அந்த புள்ளி வாழ்க்கையில் விரக்தி ஏற்படும்போது செயல்படத்
தொடங்கும். அப்போது உங்களுக்கு இந்த தொகுப்பின் தெளிவு தேவைப்படும்.
சரி, வினைப்படியே அனைத்தும் நடக்கின்றது என்பதில் நம்பிக்கை
ஏற்பட்டால் தான் நாம் அறிவு தெளிவின், அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
இங்கே, நாம் இறைவனின் குணத்தை பற்றி சற்றே தெளிவாக தெரிந்துக் கொண்டால்
தான் எல்லாம் புரியும். அதுஎன்ன…. இதோ!...
- நீ என்ற இறைவன் நடுநிலை கொண்டவன் என்றல்லவா பார்த்தோம். அப்படி என்றால் வினைப்படி எப்படி உலகத்தையும், உயிர்களையும் இயக்கமுடியும். என்றக் கேள்வி எழுகிறதல்லவா?.
இதற்கு நிகழ்கால உதாரணம்.
நீதிபதி. குற்றத்தை அறிவிக்க கூடியவராக இருந்தாலும் தன் அறிவுக்கு தோன்றிய படி எல்லாம் நீதிபதி தீர்ப்பை சொல்ல முடியாது. குற்றம் நிருபனமானால் சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கின்ற தண்டனையைத் தான் கொடுக்கமுடியும். சரி இந்த உதாரணத்தில் சட்டம் என்றால் என்ன அதுவே திருவருள்.
- உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும், சமயங்களும் இறைவனின் புகழை பக்கம் பக்கமாக பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் திருவருளை குறித்து அத்தனை விளக்கமாக எடுத்துக் கூறவில்லை. ஆனால் வல்லவன் மட்டுமே திருவருட்பா என்று திருவருளின் அருமை, பெருமைகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார். அதனால் தான், யாம் ஒருவனே பெற்றனன் என்றும் அறுதியிட்டு குறிப்பிடுகின்றார். இதைப்போல், நீங்களும் பெறவேண்டும் என்று நம்மையும் அழைக்கின்றார். பெறுவீர்கள் !என்று சத்தியம் செய்கின்றார்.
இங்கேதான் நமக்கு ஒன்று தோன்றும், இவ்வளவு
அழகாக சொல்லியும் யாரும் அவர் வழியில் செல்லவில்லையே ஏன் என்றக் கேள்வி எழும்……. விளக்கத்திற்கு ஒளவை பாட்டி என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.
தருமம் பொருள்காமம் வீடெனு
நான்கும் உருவத்தா லாய பயன்.
ஆக திருவருள், மனித
பிறவி (உடல்) எடுத்த ஆன்மாக்களை எவ்வாறு இயக்குகின்றது என்பதைப் புரிந்துக் கொண்டால் நாம் யார் என்பதன் முதல் புள்ளி தொடங்கப்படும். நான்கே பிரிவு….
- 1. தருமம். = தர்மம் செய்வதே இவர்கள் எண்ணம்.
- 2. பொருள். = பொருள் சேர்ப்பதே இவர்கள் எண்ணம்.
- 3. காமம் = ஆசைப்பட்டதை அடைவதே இவர்கள் எண்ணம்.
- 4. வீடு (மோட்சம்). = வீடடைவதே இவர்கள் எண்ணம்.
சரி இவங்கதான் இப்படி
சொல்கிறார்களே திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று
பார்ப்போம்……
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263).
அடப்போப்பா, என்று நீங்கள் சொல்வது புரிகிறது. இந்த நான்கு பிரிவிலேயே நம்மை சுழல வைத்து பிறவி சுழற்சியை நடத்திக்கொண்டிருக்கின்ற
திருவருள் வல்லபம் யாதென்று.
இப்ப புரியுதா! திருவருள் என்றால் என்ன என்று. அப்ப திருவருள் நல்லவரா?
கெட்டவரா? என்று கேட்கத் தோன்றுகிறதா!!! இதுக்கு
நம்ம சிவவாக்கியர கேட்டாப் போகுது.
நல்லதல்ல கெட்டதல்ல
நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே.
இன்னும் சற்று தெளிவாக வேண்டுமானால்
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
சிவவாக்கியார் இப்படி சொல்கிறார். நம்ம வல்லவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா….
- எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த விதமாக, எந்த மட்டில், எதை அனுபவிக்க வேண்டுமோ, அதை அந்த காலம், அந்த இடம், அந்த விதம், அந்த மட்டும் பொருந்தப் பொசிப்பிக்கின்றது திருவருட் சத்தியாய் இருந்தால் நமக்கென்ன சுதந்திரம் இருக்கின்றது. எல்லாம் திருவருட் சத்தி காரியமென்று அதைத் தியானித்திருக்க வேண்டும். உண்மை இது. இதை கொண்டு தெளிந்திருக்க வேண்டும்.
இப்போது புரிகிறதா திருவருள்
எவ்வாறு அண்ட சராசரங்களையும் தன் வல்லபத்தால் இயக்குகிறது என்று. வினைக்கீடாய் திருவருள்
உலகத்தை இயக்கும் போது நம்மால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சற்றே பொறுங்கள் சாவித்திரி
என்ற ஆன்மாவின் அனுபவத்தை கேட்டால் தெளிவு பிறக்கும். அது
என்ன….
- விதியை (வினை) மதியால் (அறிவு) வென்ற கதை தான்.
இமயனிடமிருந்து தன் கணவனை காப்பாற்றிய கதை.
அப்பாடி என்று நீங்கள் சொல்வது புரிகிறது. வினையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் அறிவின் வளர்ச்சி விரியத் தொடங்கும்.
No comments:
Post a Comment