இந்த இடத்தில் நாம்
சற்றே மனித உயிர் தோன்றிய காலத்திற்கு சென்றால் தான் நமக்கு உண்மையை தெள்ளத்தெளிவாக உணரமுடியும். (சற்றே உங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு பாருங்கள்).
இந்த வாழ்க்கை என்னும்
பள்ளியில் அனைத்து உயிர்களும் பக்குவ பட்டே மேலேறிவரவேண்டும் என்பதற்காக தான் வல்லவன் அதிகமாக சம்சாரிகளுக்கு அதிகமான விளக்கங்களை வழங்கி
சென்றிருக்கின்றார். இதோ
அவர் விளக்க வார்த்தைகள்.
இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல், குழப்பம் முதலியவை யாவும் நமக்குப் பக்குவம்
வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.
ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருத்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருத்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இடத்தில் தான்
நாம் ஒன்றை தெள்ளத்தெளிவாக புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று நாம் அடிக்கடி சொல்வது
உண்டு. நன்மை நடக்கும் போது இதை அதிகம் உபயோகபடுத்துவோம்
ஆனால் தீமை நடக்கும் போது அப்படியே மாற்றி சொல்வோம். இதை தான் சித்தர்களும், முனிவர்களும்,
ஞானிகளும் எல்லாம் அவன் திருவிளையாடல் என்று
அவனின்றி ஓர் அனுவும் அசையாது என்று உரைத்திருக்கின்றார்கள்.
இப்படி நான் ஐ காண்பித்து மெதுவாக நம்மை சன்மார்க்கத்தின் அடுத்த பகுதியாகிய நீ
என்பதை உணர்த்துகின்றார்.
நீ ஆகிய இறைவன் என்பது யார், அவரின் நிலை யாது, அவரின் சொருபரூப சுபாவங்கள்
எவை என்று நமக்கு தெரிய படுத்துகின்றார்.
இதோ அவர் அனுபவ வெளிபாடு.
"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.
ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா
நம்மைச் சுற்றுகிறார்கள்!"
என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன்,
இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது
அந்தப் பதார்த்தத்தினுடைய
ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி
அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில்
பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து
கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
இப்படி பொதுவாக தெய்வத்தை பற்றி கூறி நீ ஐ தெரிந்து கொள்ள
சொல்கின்றார்.
நீ என்பது என்ன? அது உண்மையா? பொய்யா?
என்று நாம் முதலில் தெரிந்து புரிந்து
கொள்ளவேண்டும். இந்த
புரிதலில் நமக்கு உண்மை வெளிபட்டால் தான்
காரணத்தின் (சுட்சுமத்தின்) அடுத்த முடிச்சை அவிழ்க்க
முடியும்.
சரி நாம் கண்ட நிகழ்கால அனுபவங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் நாம் பாரதி என்ற ஆன்மாவையும், பெரியார்
என்ற ஆன்மாவையும் எடுத்து கொண்டோமானால் உண்மை
சற்றே நமக்கு புரியும்.
பாரதி – அறிவே தெய்வம் என்றார்
பெரியார் – தெய்வம் இல்லை என்றார்
அறிவே தெய்வம் என்ற பாரதி 38 வயதிலும், தெய்வம் இல்லை என்ற பெரியார் எறகுறைய 90 வயதிலும் இறந்தனர். தெய்வம் உண்டு என்ற பாரதிக்கு 38 வயதும், வறுமையும் கிடைத்தன. அதே சமயம், இல்லை என்ற பெரியாருக்கு 90 வயதும், செல்வ செழிப்பும், பெருமையும் கிடைத்தன. இது என்ன விந்தை இல்லை என்பவருக்கு வாரி
வழங்குவதும், இருக்கு என்பவருக்கு ஒன்றும் கொடுக்காததுதான் நீ என்ற தெய்வத்தின் செயல்களா?
இதைத்தான், நமது வல்லவன் அழகாக தமது அனுபவத்தில் விளக்குகின்றார் "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.
ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா
நம்மைச் சுற்றுகிறார்கள்!"
அதுபோல், தெய்வத்தையுள்ளபடி
அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில்
பிரியம் வாராது.
இந்த உதாரணத்தில் இருந்து
நாம் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டியது என்ன என்றால், தெய்வத்தை
பற்றி வேத வியாசர் ரிஷி தன் அனுபவத்தில் கூறுவதை பார்ப்போம்.
நடுநிலையே தெய்வமெனப்படும்
இதோ திருமூலரின் தெய்வம்
குறித்த அனுபவம்….
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரோடு யானும்நின் றேனே.
அது என்ன நடுநிலை தெய்வகுணங்களாகிய எட்டு குணங்களில் எந்த குணங்களும் மிகாமலும், குறையாமலும் எதனூடும் தோயாமலும் ஒரு பார்வையாளனாக இருந்து முக்கியமாக அதை குறித்து சிந்திக்காமல் இருப்பதே நடுநிலை எனபடும்.
தெய்வத்தின் ஐந்தொழில்கள் அறிந்தால் இன்னும் சற்று தெளிவு பிறக்கும். அவை…
பிறப்பித்தல்
காத்தல்
பக்குவம் வருவித்தல்
குற்றம் நீக்குவித்தல்
அழித்தல்.
இதுவே நமது வல்லாளனின் ஒற்றை வார்த்தை வெற்றி
மந்திரம் சமரசம்
மற்றும் ஒரு தெளிவிற்கு சுத்த ஞானி திருமூலரின் ஒரு அனுபவத்தை அறிந்தால்
இன்னும் சற்று தெளிவு பிறக்கும்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் (1)ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே
ஏழுபார்ச் சென்றவன்.
இதைத்தான் வல்லவன் தனது அகவல் பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு
ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே
இங்கே கொடுக்கபட்டிருக்கும் மற்றைவையெல்லாம் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவை எற்படுத்தவே. எல்லாவற்றையும், பகவத்கீதையைகூட உள்ளடக்கியது சமரச சுத்த
சத்திய சன்மார்க்கம்.
Ø அழிவற்ற பரம்பொருளே பிரம்மம்.
அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும்.
Ø ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது
Ø இந்த உடம்பு க்ஷேத்திரம்
என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து
நிற்போனை க்ஷேத்திரக்ஞனென்று பிரம்ம ஞானிகள்
சொல்லுகிறார்கள்.
Ø க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ்
ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
Ø மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம்,
பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,
Ø ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ
ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான
மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.
Ø கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு,
மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத்
தொடர்ந்து நடத்துகிறான்.
Ø அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும்
செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை,
கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று
பகுதிப்பட்டது.
Ø உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்
மனிதன் ஈடேறுகிறான்.
Ø வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, எப்போதும்
என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும்
எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ
அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்,
பெரிய நாசத்தை அடைவாய்.
Ø புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
Ø உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
Ø எவன் நல்லதும்
கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ,
அவனுடைய அறிவே நிலைகொண்டது.
Ø இது பிரம்ம
ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலை கொள்வோன்,
பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
Ø உண்மை அறிந்த யோகி,
“நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும்,
கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும், புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக்
கடவான்.
Ø கல்வியும் விநயமும் நன்கு கற்ற
பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும்
புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
Ø அவனுக்குத் தோழன், பகைவன்,
பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி
எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.
Ø அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து
தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி
மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும்
தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி,
Ø தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக
மாட்டான்.
Ø நடுநிலையே சரியையெனப்படும்.
Ø நடுநிலையே கிரியையெனப்படும்.
Ø நடுநிலையே யோகமெனப்படும்.
Ø நடுநிலையே ஞானமெனப்படும்.
Ø ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச்
செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்.
அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய்.
ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து
தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.”
Ø இந்த ஆத்மாவை, “வியப்பென
ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும்,
இதனை அறிவான் எவனுமிலன்.”
Ø தொழில் செய்யத்தான் உனக்கு
அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில்
செய்யாமலுமிராதே.
Ø உனது புத்தி மோகக்
குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது,
கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
Ø ஒருவன் தன் மனதில்
எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே
தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
Ø “துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே
ஆவலற்றவனாய், அச்சமும் சினமுந்தவித்தவனாயின், அம்முனி, மதியிலேயுறுதி வாய்ந்தவனென்ப.”
Ø எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
Ø தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து
விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன.
Ø மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
Ø சினத்தால் மயக்கம்; மயக்கத்தால்
நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால்
புத்தி நாசம்; புத்தி நாசத்தால்
அழிகிறான்.
Ø எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
Ø மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன்.
Ø மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே
Ø ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே
செய்கிறோம்,’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.
Ø தொழில்களைத் தொடாமலேயிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
Ø அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால்
கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
Ø பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ
Ø ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
Ø எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு
தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால்
எரிக்கப்பட்டனவாம்;
Ø கர்மப் பயனிலே பற்றுக்
களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து
கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
Ø ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும்
வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத்
தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன்
பாவத்தையடைய மாட்டான்.
Ø தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய்
– வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்
தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான்
Ø தன்னைத் தான் உயர்த்திக்
கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த
வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே
பகைவன்.
Ø எங்கெங்கே மனம் சஞ்சலமாய்
உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி
ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.
Ø மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின்
மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.
Ø இந்த குணமாகிய எனது தேவமாயை
கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ
அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
Ø இறந்தபிறகு ஆத்மா செல்லும்
வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப்
பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக்கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.
Ø அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம
ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும்
இயற்கை கர்மமெனப்படுகிறது.
Ø என் மேற்பார்வையில் சக்தி சராசர
உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே,
இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.
Ø நீ எது செய்யினும்,
எதனை நீ உண்பினும், எதை நீ
ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே,
கடவுளுக்கு அர்ப்பணமென்று செய். எனதன்பன் சாகமாட்டான்.
Ø மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான்,
பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.
Ø இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய
மாட்டான்.
Ø எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே
நிற்கின்றன.
Ø இயற்கை உன்னைப் போரிற்
பிணிக்கும்
Ø அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும்
ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா
உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்
Ø உன் மனதை எனக்காக்குக.
என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய்,
உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்
Ø இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும்
என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
Ø நம்முடைய இந்தத் தர்மமயமான
சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும்
அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி
பெறுவேன். இஃதென் கொள்கை.
No comments:
Post a Comment