’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’
- பாரதியார்.
இந்த தொகுப்பு
சாகாக்கல்வியை தெரிவிப்பதே
அன்றி வேறில்லை.
இது எந்த
மதத்தையும் சார்ந்தல்ல.
இது சுத்த
சன்மார்க்கம் சார்ந்தது.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற சுத்த
சன்மார்க்கிகளின் அனுபவங்கள்
அனைத்தும் பொருள்
விளங்க வைப்பதற்கேஅன்றி
வேறில்லை.
உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் என் முதன் வணக்கம். இந்த தொகுப்பு ஆன்மா என்ற அறிவை என்ற தன்னை என்ற நான் ஐ தேட விரும்பும் ஆன்மாக்களுக்கு சமர்ப்பனம்.
ஏன் இந்த ஆன்மாவுக்கு இந்த தேடல் தோன்றியது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். உலகில் தோன்றிய அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரு முறை தோன்ற வேண்டிய உணர்வு தேடல் இது (அது எந்த மனித பிறவியில் என்பது தெரியாது) என்பது வேதத்தில் விதித்து இருக்கின்றபடியால் இது எல்லோருக்கும் தோன்றும்…
இதை தனது பேரறிவால் கண்டு உலகம் உய்ய வழி கண்டுபிடித்து வைத்தவன் சிதம்பரம் இராமலிங்கம்யென்ற உருகொண்ட ஆன்மா. சிதம்பரம் இரமாலிங்கம் என்ற ஆன்மா தான் அனுபவத்தில் கண்ட உண்மை அனுபவங்களை எல்லா ஆன்மாக்களும் பெற வேண்டும் என்பதற்காக ஒரு தனி வழியை கண்டு அதன்படி எல்லா ஆன்மாகளும் வரவேண்டும் பெறவேண்டும் என்றே சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் என்ற ஒன்றை நிறுவினார். இங்கே ஒன்றை கூர்ந்து நோக்க வேண்டும் தனி வழி என்றவுடன் அவர் எதோ புது வழி கண்டு பிடித்து விட்டார் என்று எண்ணுதல் கூடாது. ஏற்கனவே இருந்த வழிகளில் பயணித்து அவற்றால் கூடாமையால் இவற்றுக்கு மேல் படியாகிய சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை கண்டைந்தார். அதன் மூலம் வெற்றியும் கண்டார். அதை நமக்கும் விட்டு சென்றார். இதோ அவர் அனுபவ வார்த்தைகள்
“மேலும்,
இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில்
சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது
பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும்.
அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச்
சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற
- ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்
சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம்
எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”
ஆன்மாக்களின்
தேடலுக்கு வல்லவனின் இந்த வார்த்தைகளே போதும் இதற்கு வேறு பிரமானம் வேண்டியது இல்லை.
எதுவும் வேண்டாம் என்று நம்மை தேடலின் அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் போது அவர்
கண்ட சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்திற்கு அழைத்து
செல்கின்றார்.
அது என்ன சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் ஏற்கனவே இருக்கின்ற
சன்மார்க்கம்
சுத்த சன்மர்க்கம்
ஷடாந்த சன்மார்க்கம்
இவைகளில் இல்லாத ஒன்று என்ன இவர் கண்ட மர்க்கத்தில் இருக்கின்றது. மற்ற மார்க்கங்கள் எல்லாம் ஒரு நிலைபாட்டினை பற்றிக்கொண்டிருக்கின்றன. அதுதான் வரையறை விதி என்று வகுத்திருக்கின்றன. ஆதலால் அவைகளால் விதியை மீறமுடியாமல் மயங்குகின்றன தயங்குகின்றன. இதற்கு உதாரணமாக சுத்த ஞானி திருவள்ளுவர் அவர்கள் அனுபவத்தை எடுத்து கொள்ளலாம்
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
“இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.
இவ்வாறு தன் அனுபவத்தில் கண்ட சமரசத்தை கொண்டு எல்லாவற்றையும் வெற்றி கொண்ட வல்லவன் சன்மார்க்கத்தை எவ்வாறு நமக்கு வெளிபடுத்துகிறார்.

ஆனால் இவர் கண்ட மார்க்கத்தில் எதையும் பற்றாமல்
எதனூடும் விகற்ப படாமல் சமரசம் என்ற ஒன்றினை கொண்டு அனைத்தையும் வெற்றி கொண்டு
அதையே நமக்கு வழியாக காட்டியிருக்கிறார். இதோ அவர் அனுபவ வார்த்தைகள்..
“இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.
இவ்வாறு தன் அனுபவத்தில் கண்ட சமரசத்தை கொண்டு எல்லாவற்றையும் வெற்றி கொண்ட வல்லவன் சன்மார்க்கத்தை எவ்வாறு நமக்கு வெளிபடுத்துகிறார்.
No comments:
Post a Comment