Saturday, November 5, 2016

நான் என்ற தன்னை அறிந்தால் …………………………………. (சன்மார்க்கம் (எ) உயிர் இயல்)


 
 
 
சன்மார்க்கமாவது நீயே நான் நானே நீ                                                                                    `               -       ஒழிவிலொடுக்கம் பாடல் எண் 57 பக்கம் – 69
சன்மார்க்கம் சகலகலை புராண வேத
     
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
     
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
     
ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
      பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.                                                                                                                    -      
சிவஞானசித்தியார்
 
 
'ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும்
வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்'                                          
-      ஔவையார்
 
 
 

சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.                                       

 -              சிதம்பரம் இராமலிங்கம்

என்னடா இது புதுசா இருக்கே அப்படின்னு நினைக்கிறீர்களா. ஆமாம் சார் உண்மை எப்பவும் புதிதாகத்தான் இருக்கும்.

சன்மார்க்கத்தை சிவஞானசித்தியார் தனது பாடலில் மிகதெளிவாக விளக்கியிருக்கின்றார். எல்லாவற்றையும் கற்று தெளிந்து அவற்றை கீழடக்கி மேலிருப்பதுவே சன்மார்க்கமாம் மேலும் அதுவே ஞான நன்மார்க்கமாம்.

இதைதான் வள்ளலாரும் சன்மார்க்கமாவது நீயே நான் நானே நீ என்று சொல்லி ஆத்மவிசாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

நான் என்ற தன்னை அறிந்தால் தான் நீ என்ற இறைவனை அறியமுடியும் என்று உணர்த்துகின்றார்.

ஆத்மவிசாரம் என்பது நான் என்ற சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முயற்சி.


ஆன்மா, தளை, வீடு, அறிவு


உடம்பு முதலிய அழியும் பொருள்களை ஆள்வது ஆன்மா.

உடம்பு, மனம் இவைகளைத்'தான்' எனக் கருதும் எண்ணம்

ஆன்மாவுக்குத் தளை.

அதனின்று விடுதலை பெறுவதுதான் வீடு (மோட்சம்).

அவ்வெண்ணத்தை ஏற்படுத்துவது அவித்தை.

எதனால் அவ்வெண்ணம் விலகுகிறதோ அது பேரறிவு (ஞானம்). 
 
-      சர்வசார உபநிடதம்

 

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு                                -      திருவள்ளுவர்

வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை         
 
-      சிவவாக்கியர்

தன்னை அறிந்தவனே சன்மார்க்கம் அறிந்தவன்                  -      சித்தர்

தன்னை அறியும் அறிவை பெறுவதே சன்மார்க்கத்தின் முதல் படி. ஆக, நான் (எ) ஆன்மா (எ) தன்னை பகுத்துப்பார்த்தால் தான் அதன் இயல்பை நம்மால் உணரமுடியும். சரி வாருங்கள் பகுத்து பார்த்துவிடுவோம். எப்படி எனில் நம்ம சிதம்பரம் இராமலிங்கம் கூறியபடி. அப்படி அவர் என்னதான் கூறியிருக்கின்றார், பார்ப்போம் வாருங்கள்.

நான்கு புருஷார்த்தங்களை மட்டுமே அவர் சுவற்றில் எழுதி இதை தடைபாடாது விசாரியுங்கள் என்று கூறிவந்தார். அவையே ஜீவகாருண்ய ஒழுக்கம். எதற்காக இதை கடைசியில் வலியுறுத்திவந்தார். அவை

1.   இந்திரிய ஒழுக்கம்

2.   கரண ஒழுக்கம்

3.   ஜீவ ஒழுக்கம்

4.   ஆன்ம ஒழுக்கம்

1.   இந்திரிய ஒழுக்கம்  - புலனறிவு           - புலனனுபவம்       - நட்சத்திர ஒளி
2.   கரண ஒழுக்கம்      - மனஅறிவு           - மனஅனுபவம்       - சந்திரன் ஒளி
3.   ஜீவ ஒழுக்கம்        - உயிர்அறிவு         - உயிரனுபவம்       - சூரியன் ஒளி
4.   ஆன்ம ஒழுக்கம்     - உண்மைஅறிவு     - உண்மைஅனுபவம் - அக்னி ஒளி.
நான் என்ற ஆன்மா என்ற தான் எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு விளக்குகின்றார் என்பதை பாருங்கள்.

ஆக ஆன்மா என்பது தன் உண்மையான ஒளியை (எ) அறிவை (எ) அனுபவத்தை மறைத்து பொய் ஒளியை (எ) அறிவை (எ) அனுபவத்தை நமக்கு காண்பித்து கொண்டிருக்கின்றது என்பதை கேட்டு, சிந்தித்து, தெளிந்து, உணர்ந்து அதிலே அழுந்தாமல் மீண்டு மேலேறிவர வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதன் தாத்பரியம் ஆன்மா தன் ஒளியை உயிரில் பிரிதிபலிக்கின்றது, உயிர் அந்த ஒளியை மனதில் பிரிதிபலிக்கின்றது மனம் அந்த ஒளியை புலன்களில் பிரிதிபலிக்கின்றது என்பதே.

ஆக, அக்னி ஒளி சூரிய ஒளியாகின்றது,

சூரியன் ஒளி சந்திரன் ஒளியாகின்றது,

சந்திரன் ஒளி நட்சத்திர ஒளியாகின்றது

ஒரே ஒளியே பல பரிமாணங்களில் மாறுபட்டு பல ஒளிகளாக தோன்றி நம்மை மயக்கும் என்பதை உணர சொல்கின்றார். இதை உணர்த்தவே பூச நன்னாளில் ஞானசபையில் ஜோதி தரிசனம் நடத்த செய்தார். ஜோதி எப்படி காண்பிக்க படுகின்றது என்பதை அறிந்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

மேலும், ஆன்மாவே நித்தியம் மற்ற மூன்றும் அனித்தியம் என்பதை உணர்ந்து அனித்தியமாகிய உடல், மனம் மற்றும் உயிர் இவற்றை நித்தியமாகிய ஆன்மாவில் நிலைக்க செய்வதே சாகக்கல்வியின் இயல்பென்றும் இதுவே ஆன்ம விசாரம் என்றும் இதை அடைவதே சன்மார்க்கத்தின் லட்சியம் என்றும், சாகாதவனே சன்மார்க்கி என்றும், இதை எல்லோரும் அடைய வேண்டுமென்றும் இயம்புகின்றார்.

பிண்டமும் அண்டமும் ஒன்றே என்பதை படி ஒன்றி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அண்டத்தில் எவ்வாறோ அவ்வாறே பிண்டத்திலும் உள்ளது என்பதை

புறப்புறம்

புறம்

அகப்புறம்

அகம்

என்றுதான் வந்து முற்றும் என்று உணர சொல்கின்றார்.

நித்தியமான, உருவமும், அருவமும், உருஅருவான ஆன்மா (எ) நான் (எ) உண்மை அறிவு தன்னால் எதையும் செய்து கொள்ளமுடியாத ஒன்று. அதனால் அது இயங்குவதற்கு அதற்கு உயிர் என்ற அனித்திய பொருள் அதனோடு சேர்க்கபட்டது. எப்படி எனில் தன் அறிவின் ஒரு சிறு பகுதி அந்த உயிருக்கு கொடுக்கப்பட்டது. உயிர் சூட்சுமத்தில் இயங்குவதற்கு அதற்கு மனம் என்ற ஒன்று சேர்க்கப்பட்டது .எப்படி எனில் உயிர் தன் பெற்ற அறிவில் ஒரு பகுதியை மனதிற்கு கொடுத்தது. உயிர் அருவமானதால் அதற்கு உருவம் படைக்கபட்டது. எப்படி எனில் மனம் தான் பெற்ற அறிவில் சிறு பகுதியை உடலுக்கு கொடுத்தது.

தாத்பரியம் யாதோவெனில் ஒன்றில் ஒன்றை கொடுக்க ஒன்று வந்தது

அகம்         -      ஆன்ம அறிவு -      கோடி சூரியபிரகாசம்

அகப்புறம்    -      உயிர்  அறிவு -      ஒரு சூரியபிரகாசம்

புறம்         -      மன அறிவு   -      சந்திர பிரகாசம்

புறப்புறம்     -      புலன் அறிவு  -      நட்சத்திர பிரகாசம்

எப்படி சாத்தியமெனில் பிரிதிபலிப்பு (reflection) எப்படி சூரியன் தன் ஒளியை சந்திரனில் பிரிதிபலித்து ஒளிர்கின்றதோ அப்படியே. அண்டத்தில் எவ்வாறோ பிண்டத்திலும் அவ்வாறே.

கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        அக்னி,       சூரியன்,      சந்திரன்      மற்றும் நட்சத்திரங்கள்.

பிண்டத்தில்   -      ஆன்மா,      உயிர்,        மனம்        மற்றும் புலன்கள்

காரணத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        பரமாகாசம்.

பிண்டத்தில்   -      புருவமத்தி

காரணகாரியத்தாலுள்ள இடங்கள்

அண்டத்தில் -        மின்னல், இடி.

பிண்டத்தில்   -      விந்து, நாதம்.

ஆக, இந்த பத்து இடங்களிலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலும், காரணத்தாலும், காரணகாரியத்தாலும் உள்ளது.

சித்தர்கள் கண்ட எட்டும் இரண்டும் இதுவல்லவோ. உங்கள் விளக்கத்திற்காக காரியத்தாலுள்ள 4 + 4 = 8 இடங்களும்,

முதல் இடமாகிய காரணத்தாலுள்ள இடங்கள்            -     

அண்டமாகிய பரமாகசத்தில் ஒன்றாய் கூடியிருக்கின்றன, அதேபோல் பிண்டத்தில் புருவமத்தியில் ஒன்றாய் கூடியிருக்கின்றன.

இரண்டாமிடமாகிய   காரணகாரியத்தாலுள்ள இடங்கள்   -     

மின்னலில் நான்கும் இடியில் நான்குமாய் கூடியிருக்கின்றன, அதேபோல் பிண்டத்தில் விந்துவில் நான்கும் நாதத்தில் நான்குமாய் கூடியிருக்கின்றன.

ஆக, 8 + (1 + 1) 2 =  10 ஆதலால் தான் எப்போதும் நமது மனதை புருவமத்தியின் கண்ணே செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இந்த 8 ஐ குறிப்பதற்காகவே ஞான சபையை எண்கோண வடிவில் அமைத்திருக்கின்றார்.

சரி இதையெல்லாம் அடைவதற்கு சாதனம் யாதோவெனில் : -

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணுதல் வேண்டும் என்கின்றார். இந்த எண்ணம் வந்தவனே ஞான சபையின் வாசலில் நிற்க தகுதியானவன் என்றும் பின்னும் நன்முயற்சியாலே மேலேறிவர இயலும் என்றும் இயம்புகின்றார். மற்றவர்களெல்லாம் ஞான சபையின் முன்னும், பின்னும், சுற்றியும், அலைந்தும் வாயில் காணாது தவிப்பார்கள் என்று தயவினால் இயம்புகின்றார்.

சரி சற்று விளக்கமாக பார்க்கலாம்,

பொதுவாக பார்ப்பது என்பது என்ன :-

தனக்குள்ள ஆகாரத்தை பிறருக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடப்பதல்ல. வந்தவர்கள் தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தை கொடுத்தும், தாங்குபவர்களாகில் முயற்சித்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து தான் அதிசியமின்றி நிற்றல். அதுவுமில்லையென்றால் பச்சாபத்தோடு இறைவனிடம் விண்ணப்பிப்பது.

பரோபகாரம் என்பது என்ன :-       தன் சக்தியின் அளவு உயிருக்கு உபகரித்தல். நம் சக்தியின் அளவு நமக்கு நன்றாகவே தெரியும்.

பேதம் அற்று பார்ப்பது என்பது என்ன :-   

அண்ட சராசரங்களையும் தன் திருவருட்சத்தியால் இயக்கி கொண்டிருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அப்படியென்றால் நம்மையும், நம்மை சுற்றியிருக்கின்ற எல்லோரையும் இயக்குவது திருவருட்சத்தி. நம் சுதந்திரத்தால் நாம் இயங்குவதாய் நாம் நினைத்து கொள்வதால் நமக்கு பேதம் தோண்றுகின்றது. அதனால் தான் தன் தற்சுதந்திரத்தையும், ஜீவசுதந்திரத்தையும், போகசுதந்திரத்தையும் திருவருளிடம் ஒப்படைத்து விடுகின்றார். இனி தனக்கு யாதொரு சுதந்திர தோற்றமும் இந்த உலகத்தில் உள்ள பொருட்களிடம் தோண்றாது என்று திருவருளிடம் சத்தியம் செய்கின்றார். அப்படியென்றால் எல்லா உயிர்களையும் இயக்கும் திருவருள் என்னையும் இயக்கட்டும். திருவருள் நம் வினைக்கீடாய் நம்மை இயக்கட்டும். அதில் வருவது அனைத்தும் திருவருள் சுதந்திரத்தால் வந்தது என்று அதை அனுபவித்து தெளிந்திருப்போம். நம்மைப் போலவே எல்லா உயிர்களையும் திருவருள் அவர்கள் வினைக்கீடாய் இயக்குகின்றது என்பதில் தெளிந்து

பாவம் நீயும் என்னைப்போல் ஏழை என்று அறிந்து அவர் துன்பத்தை நிவர்த்திக்க துணிவதே ஜீவகாருண்யம் இந்த ஜீவகாருண்ய த்தினால் திருவருள் பதிந்து அறிவு விளங்கும். இதுவே ஆன்ம நேய ஒருமைப்பாடு என்ற எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணுதல்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னது இதனால் தான்.

வாசி யோகம் (மூச்சு கலை அல்ல)

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி

வந்துபோகும் கணக்கை முடி

வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்தி

வெந்துசாகும் பழக்கம் கழி

வீணே கசியும் கவனம் வளிமேல்பூண

நசியும் மரணம்

திருப்பி மனத்தை வாசியில் பூட்ட

திறக்கும் அமுத வாரி

கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்திருத்த

உடம்பு ஒளிரும் ஒளியும் வந்து

பிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோக
முந்திச்செல் வாசியோக வழி


-    நன்றி தென்றலாரே!


 

விதியை வெல்லுவது எப்படி?


விதியை மதியால் வெல்லாம் என்பது பழமொழி இங்கே மதி என்பது இடகலை (இடது மூச்சல்ல) பற்றியது. அதாவது இடகலை பற்றி எறினால் விதியை வெல்லாம் என்பது இதன் தத்துவம்.                                                                                         

 — பதஞ்சலி மகரிஷி

 

திருவிளங்கச் சிவயோகச் சித்தியெல்லம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்

தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கவொளி சிறந்ததிரு விளக்கே

உருவிளங்க வுயிர் விளங்க யுணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்

மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே

பின்குறிப்பு:-

ஆகா எல்லாம் தெரிந்துவிட்டது என்று திருவருள் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். தலையிட்டீர்கள் என்றால் எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் இருப்பார்.(கவுண்டமணி சொல்வதைப்போல் “டேய் நீ எந்த எந்த டைப்ல முழிய வச்சிக்கிட்டு எப்பிடி எப்பிடி எல்லாம் ஆக்ட் குடுப்பனு எனக்குதான்டா தெரியும். செய்யறதையும் செஞ்சுபுட்டு ஒன்னும் தெரியாதவன் போல் நிக்கறத பாரேன்”  அப்புறம் அவதிபட வேண்டியதுதான். ஆதலால் ஆனந்தத்தோடு, அமைதியாக, திருவருளின் விளையாட்டை அனுபவித்து வழிபடுங்கள். இதில் அனுபவம் பெற்றால்தான் திருவருளை இயக்கும் தலைவனாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரகிய நீயை அறியமுடியும்.

.

 

 

 

 

 

 

திருச்சிற்றம்பலம்

மீண்டும் பூக்கும்….